‘கட்டிப்பிடிச்சு கூட அழ முடியாது’!.. கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் இறுதிசடங்கு இப்படி தான் நடக்கும்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 09, 2020 04:24 PM

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு எவ்வாறு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to handle Coronavirus dead bodies and last rites explains

அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி இறந்த பின் அவரது உடலை உறவினர்களிடன் மருத்துவர்கள் காண்பிப்பார்கள். பார்க்க வரும் உறவினர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பின்னரே இறந்தவரின் சடலத்தை பார்க்க அனுப்புகின்றனர். இதனை அடுத்து உறவினர்களை வெளியே அனுப்பிவிட்டு, உயிரிழந்தவருக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபரகரணங்களை மருத்துவர்கள் அகற்றுவார்கள்.

பின்னர் சடலத்தின் வாய் மற்றும் மூக்கை பஞ்சு மற்றும் துணியால் அடைத்துவிட்டு பிளாஸ்டிக் பைக்குள் வைத்து அடைத்துடுவார்கள். இதனை அடுத்து சடலம் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பையின் மேல் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு சடலத்தை அடக்கம் செய்யும் ஊழியர்களும் பாதுகாப்பு கவசம் அணிந்திருப்பர். பின்னர் உயிரிழந்தவர்களின் முக்கியமான உறவினர்கள் சிலர் மட்டுமே வர வழைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்படும். ஆனால் உயிரிழந்தவரின் சடலத்தை கட்டியணைத்து அழவோ, முத்தம் கொடுக்கவோ அனுமதியில்லை.

இதனைத் தொடர்ந்து உயிரிந்தவரின் வழக்கப்படி சடலத்தை புதைக்கவோ, அல்லது எரிக்கவோ செய்யப்படும். சாம்பல் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இறந்தவரின் சாம்பல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒருவேளை புதைக்கப்பட்டால் வழக்கமாக தோண்டும் ஆழத்தை விட 2 மடங்கு அதிகமாக குழி தோண்டப்பட்டு புதைக்கப்படுகிறது.