'மங்கள டம் டம்.. மத்தள டம் டம்'.. அசால்டா தவில் வாசிக்கும் 5 வயசு சிறுவன்.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Apr 06, 2023 06:52 PM

குழந்தைகள் எதைச் செய்யும் போதும் ரசிக்கும்படியாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவர்களின் மழலை பேச்சு பாடல் போல இருக்கும் என்று சொல்லுவார்கள். அப்படித்தான் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அழகாக மத்தளம் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tamilnadu 5 years old Boy Playing Thavil Video Viral

மங்கள இசை என சொல்லப்படக்கூடிய தவில், நாதஸ்வரம் பலருக்கும் பிடித்தமான ஒன்று. பொதுவாகவே இந்தியச் சமூகங்களில் விசேஷ வீடுகளில் ஒலிக்க கூடிய இந்த பாரம்பரிய இசை மங்கள இசை எனப்படுகிறது. நாதஸ்வரமும் தவிலும் கச்சிதமான அலைவரிசையில் ஒன்றுக்கொன்று முயங்கி, கேட்பவர்களின் மனதில் நேர்மறை எண்ணத்தை உருவாக்குவதற்காக அனேக பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்த இசை கருவிகள் வாசிக்கப்படுவதுண்டு.

அப்படித்தான் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கீழ்வேலூர் பகுதியில் பாலசுந்தரம் என்பவர் அப்பகுதியில் கோயில் விசேஷங்கள் & திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் நாதஸ்வரம்,தவில் வாசித்து வருகிறார். அவருடன் சென்று அவ்வப்போது ஜால்ரா வாசித்துக் கொண்டிருந்த அவருடைய மகன் 5 வயதுடைய சாய் வெங்கடேஷ், தற்போது கீழ்வேலூர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தவில் வாசித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இந்த சிறுவனை பாராட்டுகின்றனர்.

Tags : #VIRAL BOY #MUSIC #TRADITIONAL #TRENDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu 5 years old Boy Playing Thavil Video Viral | Tamil Nadu News.