"எப்புடுறா".. சிறுவனின் TRENDING வசனத்தை கையில் எடுத்த புது ஜோடி.. ரகரகமா யோசிக்குறாங்களே.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக நம் சோசியல் மீடியாவில் அதிக நேரம் வலம் வரும்போது நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமில்லாமல், நாள்தோறும் என்னென்ன விஷயங்கள் வைரல் ஆவது என்பது குறித்தும் நாம் கவனிப்போம்.
அந்த வகையில் நாள்தோறும் ஏராளமான வைரல் வீடியோக்களும் மிக மிக வினோதமாக இருக்கும் விஷயங்களும் அதிகம் டிரெண்டாகி வரும்.
அப்படி தான், சமீபத்தில் சிறுவன் ஒருவன் மேஜிக் செய்வது போன்ற ஒரு வீடியோ பெரிய அளவில் மக்களை ஈர்த்திருந்தது. அதில் சிறுவன் ஒருவன் கையில் ரப்பர் பேண்ட் வைத்துக் கொண்டு இரண்டு விரலிலிருந்து அடுத்த இரண்டு விரல்களில் மாற்றுவது போல மேஜிக் செய்வது தொடர்பான வீடியோ வைரலானது. மேலும் அந்த வீடியோவில் ரப்பர் பேண்ட் அடுத்த இரண்டு விரல்களில் மாறியதும், "எப்புடுறா கையில வந்துட்டு" என அந்த சிறுவன் சூப்பராக சொல்லும் விஷயம் தான் இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து பேசும் அந்த சிறுவன், "இந்த வீடியோ பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, வீடியோவுக்கு நிறைய லைக் போடுங்க" என்றும் கூறுகிறார்.
"எப்புடுறா" என ஒரு வியப்புடன் அந்த சிறுவன் க்யூட்டாக சொல்லும் விஷயம் தற்போது மீம்ஸ் தொடங்கி பல விஷயங்களில் டிரெண்டாகியும் வந்த வண்ணம் உள்ளது. சோஷியல் மீடியாவை திறக்கும் போதே பல வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் உள்ளிட்டவற்றில் கூட எப்புடுறா என்ற வசனத்தை குறிப்பிட்டு நிறைய விஷயங்களை அதிகம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், ட்விட்டரில் வலம் வரும் திருமண ஜோடியின் வீடியோவும் அதிக கவனம் பெற்று வருகிறது.
எப்புடுறா என்ற வசனத்தை வைத்து வைரலாகி வரும் இந்த திருமண வீடியோ எங்கே நடந்தது என்பது குறித்த விவரங்கள் சரிவர தெரியவில்லை. மேலும், இந்த வீடியோவில் வாலிபர் தாலி கட்டுவதற்கு முன்பாக, சிறுவன் பேசும் முதல் வசனம் வருகிறது. தொடர்ந்து, தாலி கட்டி முடித்த பின் அந்த பெண் தாலியை பார்த்தபடி, "இழுக்குறேன் எப்புடுறா" என கணவரிடம் கேட்கிறார்.
சிறுவன் பேசுவதற்கு இணங்க மிகவும் Sync ஆகும் வகையிலும் இந்த திருமண வீடியோ இருப்பதால் பார்ப்போர் பலரது லைக்குகளையும் இந்த வீடியோ அள்ளி வருகிறது.
Adeii ellai meeri poringa da 🤣🤣😂😂 pic.twitter.com/RXvikpjhfE
— கொசு (@vjr_of) November 15, 2022