“பார்வைய இழந்துட்டேன்.. என்ன விட்டு போய்டுனு அழுதேன்.. ஏன் போகல?” .. நீயா நானாவில் பெண் உருக்கம்.. கணவர் கூறிய நெகிழ்ச்சி பதில்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் காதலால் உயர்ந்தவர்கள், காதலை கொண்டு வாழ்க்கையை உயர்த்தியவர் என்கிற தலைப்புகளில் இளைஞர்கள் பேசினர். இந்த தலைப்பில் இவர்கள் பேசியது ஓரிரு தினங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பெண் ஒருவர் பேசினார். அதன்படி, தனக்கு ஒரு கட்டத்தில் இடது கண் பார்வை இழந்து விட்டதால் தன்னால் தன் கணவர் கஷ்டப்படக்கூடாது என்று சொல்லி அவரை தன்னை விட்டுப் போகும் படியாக மன்றாடி இருக்கிறார்.
ஆனாலும் அவர் செல்லவே இல்லை. தற்போது குணமாகிவிட்ட அப்பெண், “ஏன் என்னை விட்டு அப்போது போகவில்லை?” என்று தன் கணவரிடம் நேருக்கு நேராக கேட்கிறார். அதற்கு அந்த இளைஞரும், “வேற எங்கே போவது?” என்று சிரித்தபடி இயல்பாக பதில் சொல்கிறார்.
இந்த தம்பதியின் மகிழ்ச்சியான இந்த உரையாடல் ட்ரெண்டாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு டிரெண்டாகும் இந்த தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
