இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 11, 2019 10:33 AM
1. நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை போல, தமிழக அரசியலில் இன்னமும் வெற்றிடமுள்ளது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
3. தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அநேக இடங்களில் மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டி அமெரிக்காவில், அவருக்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
5. கன்னியாகுமரி மேல்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்காததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்
6. சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சஹி இன்று பதவியேற்க இருக்கிறார். அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
7. மேற்கு வங்கம் அருகே கரையை கடந்த புல் புல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
8. புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது. அடுத்த நிகழ்வு வரும் 2032-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
9. ஆந்திர மாநிலம், ஐதராபாத் கச்செகுடா ரயில் நிலையம் அருகே, புறநகர் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
10. வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில், அபாரமாக பந்துவீசிய சஹார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.