'மாணவி கேட்ட அடுத்த செகண்டே...' 'படு குஷியாகி...' 'வாங்க எல்லாரும் மேடைக்கும் வாங்க...' - பள்ளி மேடையில் ருசிகரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுடன் ராகுல் காந்தி மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடியுள்ளார்.
![Rahul Gandhi dances with school children in Kanyakumari Rahul Gandhi dances with school children in Kanyakumari](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/rahul-gandhi-dances-with-school-children-in-kanyakumari.jpg)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவி ஒருவர் மேடையில் ஒரு டான்ஸ் ஆட சொல்லி கேட்டார். சற்றும் யோசிக்காமல் உடனே சரி என்று உறுதியளித்தார் ராகுல்.
மூன்று மாணவிகள் மகிழ்ச்சி பொங்க மேடைக்கு வந்தனர். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரையும் மேடைக்கு ராகுல் அழைத்தார்.
குழுமி இருந்த மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் கைத்தட்டி ஆர்ப்பாரித்தனர்.
ஆங்கிலப் பாடல் ஒன்றை மாணவியொருவர் மைக்கில் பாட, 3 மாணவிகள், கே.எஸ்.அழகிரி மற்றும் தினேஷ் குண்டுராவ் ஆகியோருடன் ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடினார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)