‘ஒரே ஒரு போட்டோ தான்’!.. வியந்துபோன நெட்டிசன்கள் கேட்கும் ஒரு கேள்வி.. ‘செம’ வைரலாகும் ராகுல்காந்தி போட்டோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 01, 2021 01:43 PM

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rahul Gandhi boxer-abs pic goes viral, Netizens asks fitness tips

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், மீனவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் படகில் கடலுக்குள் சென்றார். அப்போது திடீரென படகில் இருந்து கடலில் குதித்த ராகுல்காந்தி, சுமார் 10 நிமிடங்கள் கடலுக்குள் நீந்தி பின்பு படகில் ஏறினார்.

Rahul Gandhi boxer-abs pic goes viral, Netizens asks fitness tips

ராகுல்காந்தியின் கடல் பயணம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படங்களில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ராகுல் காந்தியின் ஈரமான டி-ஷர்ட்டில் வயிற்று தசைகள் (6 பேக்ஸ்) தெளிவாக தெரிகிறது.

இந்த போட்டோவை அதிகமாக பகிர்ந்து வரும் நெட்டின்சன்கள், உடல்பயிற்சி தொடர்பாக டிப்ஸ் தரும்படி ராகுல்காந்தியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ராகுல் காந்தியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு குத்துச் சண்டை வீரரின் ஆப்ஸ் (வயிற்று தசைகள்) என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rahul Gandhi boxer-abs pic goes viral, Netizens asks fitness tips | India News.