'தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி...' - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க ஸ்டாலின்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டதை முகநூலில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதில், "CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்." என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
