அங்க சுத்தி இங்க சுத்தி ‘கடைசியில’ உங்களையும் விட்டு வைக்கலயா இந்த ‘கொடூர கொரோனா’.. தீவிர சிகிச்சையில் 2 அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 18, 2020 07:39 AM

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two staff confirmed with COVID19 symptoms at World Health headquarters

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சுவட்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர்களை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி, அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இரு நபர்களுடன் பணியாற்றிய மற்ற பணியாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags : #COVID19 #CORONAVIRUSOUTBREAK #SWITZERLAND