VIDEO: "இருயா.. நான் உனக்கு ஒருநாள் வெட்டுறேன்.. அப்பதான் தெரியும் என் கஷ்டம்!"..‘இந்த ரணகளத்துக்கு நடுவுல செஞ்ச மிமிக்ரி பெர்ஃபார்மென்ஸ்தான் அல்டிமேட்!’.. குறும்பு சிறுவனின் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Sivasankar K | Jan 27, 2021 03:42 PM

முடி திருத்தகத்தில் குட்டிப்பையன் ஒருவன் செய்யும் ரசிக்கும்படியான சேட்டைகள் அடங்கிய அட்டகாசமான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

viral cute boy cries warns and does mimicry to the barber video

ஓரிரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் கணக்கில் ஒருவர் தனது மகனுக்கு ஹேர்கட் செய்யப் போவது பற்றிய தமது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ கிளிப்பிங்கில் சிறுவன் அனுஷ்ருத் ஒரு சேரில் அமர்ந்திருக்கிறான். அவன்மீது ஒரு துணி சுற்றப்பட்டு இருக்கிறது. பார்பர் சிறுவனின் தலை முடியை வெட்ட, சிறுவன் ஒத்துழைப்பு தர வேண்டுமே? அதற்காக அவனுடன் பேசி, குட்டிப்பையனை ஒரு வழிக்கு கொண்டுவரலாம் என முயற்சி செய்கிறார்.

அப்போது பார்பர் அந்த பையனிடம், “நான் உன் தலை முடியை வெட்டும்போது நீ எப்படி உணர்கிறாய்?” என்று கேட்க அதற்கு அந்த குட்டி பையனோ, “எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!” என்று கோபமாக பேசுகிறான்.  “ஹேர்கட் பற்றி ஏன் இப்படி மோசமாக நினைக்கிறாய்?” என்று பார்பர் சிறுவனிடம் கேட்க சிறுவன் உடனடியாக தன்னை மீறி வந்த கண்ணீரையும் கண்ட்ரோல் செய்துகொண்டு,  “நீங்கள் மிகவும் மோசமான ஒருவர்” என்று தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துகிறான்.

viral cute boy cries warns and does mimicry to the barber video

சில நிமிடங்கள் கழித்து, “புலி எப்படி பேசி ஒலி எழுப்புகிறது?” என்று அந்த பார்பர் குட்டி பையனிடம் வினவுகிறார். குட்டி பையனும் தனக்குள் இருந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட்டை தட்டி எழுப்பி, புலியை போல் மிமிக்ரி செய்துவிட்டு, “புலி பேசாது. அது உறுமும்” என்று இலக்கண ரீதியாக விளக்கமளித்ததுடன், பின்னர் மீண்டும் புலியைப் போல் கேமராவை பார்த்து ஒரு உறுமல் உறுமுவிட்டு தன்னுடைய மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை மீண்டும் உள்ளே அனுப்பி தூங்க வைத்துவிடுகிறான். அதேபோல் தன்னுடைய முடியை பார்பர் வெட்டுவதால், அவர் முடியை நான் வெட்டுவேன் என்று குட்டிப்பையன் கண்ணில் கோபம் தெறிக்க கூறுகிறான்.

ALSO READ: 'ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'.. சென்னை மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம்!

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தையின் மனநிலையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது. பார்பர் எங்கே வெட்ட வேண்டும் எங்கே முடி வெட்ட கூடாது என்றெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கூறுகிறான். அத்துடன், “அதிகமாக முடி வெட்டினால் நான் வழுக்கையாகி விடுவேன்” என்றும் அந்த குட்டி பையன் பார்பரிடம் கூறுகிறான். குட்டி பையன் அனுஷ்ருத்தின் இந்த குறும்பு சேட்டைகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை இதுவரைக்கும் 2500 பேருக்கும் மேல் பார்த்து வருகின்றனர். இன்டர்நெட்டில் மக்கள் இந்த சிறுவனை நோக்கி தங்கள் அன்பு மழையை பொழிய தொடங்கியுள்ளனர். பலரும் ஸ்வீட் இந்நோசெண்ட் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Viral cute boy cries warns and does mimicry to the barber video | Fun Facts News.