X-RAY தானே எடுத்துட்டா போச்சு.. ஹாஸ்பிட்டல் ஊழியர்களையே ஆச்சர்யப்பட வச்ச யானை.. கியூட்டான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்யானை ஒன்று பொறுமையாக எக்ஸ்ரே எடுக்க மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒத்துழைக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Also Read | உலக பணக்காரர்களின் பட்டியல்.. எலான் மஸ்க்குக்கே கொஞ்ச நேரத்துக்கு Tough கொடுத்த தொழிலதிபர்.. முழுவிபரம்..!
இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக யானைகள் உருவத்தில் பெரியதாக இருந்தாலும் அதுவும் குழந்தை போலவே விளையாடக்கூடியவை. இதனாலேயே குழந்தைகளிடத்தில் யானை மீதான காதல் எப்போதுமே குறைவதில்லை. மக்களின் கவனத்தை எளிதில் ஈர்த்துவிடும். அதேபோல யானைகள் சில நேரங்களில் மிகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள கூடியவை. தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில் யானை ஒன்று மருத்துவமனை ஊழியர்களின் பேச்சை அப்படியே கேட்டு எக்ஸ்ரே எடுத்துக்கொள்கிறது.
இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எக்ஸ்ரே மையத்திற்குள் நுழையும் யானை, அங்கிருக்கும் பணியாளர்களின் சொல்படி அப்படியே நடந்துகொள்கிறது. எக்ஸ்ரே அறைக்குள் உள்ளே வந்தவுடன், அருகில் இருப்பவர் எதையோ சொல்ல யானை கீழே படுத்துக்கொள்கிறது. அதன் தலைக்கு கீழே எக்ஸ்ரே பிளேட்டை பணியாளர் ஒருவர் பொருத்த பின்னர் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
இப்படி, மிகவும் பொறுமையுடன் தனக்கு எக்ஸ்ரே எடுக்க பணியாளர்களுடன் அந்த யானை ஒத்துழைக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். "மிகவும் பொறுமையான யானை" என்றும் "சில மனிதர்கள் இந்த யானையை பார்த்து மருத்துவமனைகளில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என கற்றுக்கொள்ளவேண்டும்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
I am sure you have never seen such a cooperative patient coming in for an X-Ray pic.twitter.com/UNmhSIrXOr
— Kaveri 🇮🇳 (@ikaveri) December 7, 2022
Also Read | எப்புட்றா மொமெண்ட்... தொடையில் கேட்ச் பிடித்த ஷிகர் தவான்.. மிரண்டுபோன வாஷிங்டன் சுந்தர்.. வைரல் வீடியோ..!

மற்ற செய்திகள்
