வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீர் நெஞ்சு வலியா?.. வெளியான தகவலால் பரபரப்பான கிரிக்கெட் வட்டாரம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வந்த டி 20 உலக கோப்பைத் தொடர் முடிவடைந்ததை அடுத்து, ஒவ்வொரு அணிகளும் வெவ்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகின்றனர்.

Also Read | நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?
இதில், ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மோதி இருந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி தற்போது மோதி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. 344 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், அவர்களுக்கே வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போட்டிக்கு நடுவே வர்ணனை செய்து கொண்டிருந்த ரிக்கி பாண்டிங், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதிய உணவு நேரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவருக்கு நெஞ்சு வலி உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் கூறுகின்றது.
தொடர்ந்து, அவ்ருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள இரண்டு நாட்கள் வர்ணனையில் கலந்து கொள்வாரா அல்லது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவாரா என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.
வர்ணனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | விரைவில் கே எல் ராகுலுக்கு திருமணம்?.. வெளியான அசத்தல் தகவல்.. வைரல் ஆக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!

மற்ற செய்திகள்
