"தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா!".. சென்னையில் 2000-ஐ தாண்டிய எண்ணிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2008-ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆகவும், இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுமுள்ளது.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.
