பாதிக்கப்பட்ட '70 பேரில் 69 பேர்' குணமடைந்தனர்... 'கடந்த 21 நாட்களாக எந்த தொற்றும் இல்லை...' 'பச்சை மண்டலத்துக்கு' மாறிய 'தமிழக மாவட்டம்...!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டில் கடந்த 21 நாட்களாக புதிய தொற்று ஏதும் இல்லாத காரணத்தால் பச்சை மண்டலத்துக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மார்ச், 21ம்தேதி தொடங்கி, ஏப்ரல் 15ம்தேதி வரை, 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு முதியவர் இறப்பு தவிர, 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அத்துடன், ஏப்ரல் 15க்கு பின், புதிய தொற்று இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடநத் 21 நாட்களாக, புதிய தொற்று ஏதும் இல்லாததால், ஈரோடு மாவட்டம், பச்சை மண்டலமாக மாறி உள்ளது. இத்தகைவலை எஸ்.பி., சக்தி கணேசன் தெரிவித்தார்.
Tags : #CORONA #ERODE #GREEN ZONE