"ரவி அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கலாம்".. புள்ளி விவரத்தோடு BCCI-க்கு ஐடியா கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகளவில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
Also Read | "இந்திய அணில யார் கூடவும் எனக்கு பிரச்சினை இல்ல".. மனம் திறந்து விளக்கமளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார். உலக அரங்கில் சிறந்தவொரு டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார் அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் & டெஸ்ட் தொடரினை கைப்பற்றியது.
குறிப்பாக டாக்காவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய ஸ்கோர் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் தொடக்க டாப் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக மேட்ச் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இருப்பினும் அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் 42* ரன்களும் ஷ்ரேயாஸ் 29* ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியமான நேரத்தில் 42 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்களையும் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இச்சூழலில் அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக்க பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பதவி விலகியதை அடுத்து இந்திய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டாலும், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக விளையாடி உள்ளனர்.
அனுபவம் இருந்தும், கேப்டன் பொறுப்பு வழங்கப்படாத ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, "அஸ்வின் இந்திய அணியில் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்" என கூறியுள்ளார்.
"ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர். அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் பாக்கி உள்ளது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகவும் புத்திசாலி" என்று கனேரியா கூறியுள்ளார்.
மேலும், "அஸ்வின் 4-வது நாளில் பேட்டிங் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார், ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதற்கு முன் இந்திய அணி மிகவும் அழுத்தத்தில் இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் அந்தச் சூழ்நிலையில் அமைதியாக விளையாடினார், தனது அணிக்கு ஒரு சிறந்த ஆட்டத்தை அஸ்வின் விளையாடினார். அவர் தனது பேட்டிங் பங்களிப்புகளால் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவைக் காப்பாற்றியவர். கடந்த காலத்தில் அனில் கும்ப்ளே இல்லாமல் இநதிய அணி பலவீனமாக இருக்கும், தற்போது அஸ்வின் இல்லாத சமயங்களில் இந்திய அணியும் பலவீனமாக உள்ளது. அஸ்வின் 42 ரன்கள் எடுத்தது சதம் அடித்ததற்கு சமம்" என்று கனேரியா கூறியுள்ளார்.
Also Read | டெஸ்ட் மேட்சா?.. T20- யா?.. மகள்களுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரர் ரவி அஸ்வின்..