VIDEO: செம்பருத்தி சீரியல்... 'ஆதி' கேரக்டரில் இனி 'இவர்' தான்!.. ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக Behindwoods-இன் தொகுப்பாளர் அக்னி நடிக்க உள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் முன்னணி தொடர்களில் ஒன்று 'செம்பருத்தி'. நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ்.
அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இதற்கிடையே, நடிகர் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக, கடந்த சில தினங்களுக்கு முன், ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்தது.
அதில், "செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஆதி கேரக்டரில் நடிக்க நமது Behindwoods தொகுப்பாளர் அக்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
