‘பரபரக்கும் தேர்தல் களம்’.. கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இதுதானா..? எகிறும் எதிர்பார்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர உள்ளது. அதனால் அதிமுக, திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன. அதில் முதல் நபராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
மதுரை, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனாலும் இதுகுறித்த இறுதி முடிவை கமல்ஹாசன்தான் எடுப்பார் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
