'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'...'நான் முக்கிய முடிவை எடுத்துவிட்டேன்'... கமல்ஹாசன் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவை கமல்ஹாசன் எடுத்துள்ளார்.

'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெயரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன். இதையடுத்து மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் நிச்சயமாகப் போட்டியிடுவேன். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நானும், ரஜினியும் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம். ஆனால், டிசம்பர் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ''கூட்டணி குறித்து யார் யாரெல்லாம் என்னை அணுகுகிறார்கள் என்பதை இப்போது வெளியில் சொல்லக் கூடாது. நேர்மையானவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் அங்கே இருக்க வேண்டும். நேர்மையான கட்சியில் இருக்கலாமே. நேர்மை மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் மூலதனம்'' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
