'அவங்க மூணு பேரும் சேர்ந்த கலவை இவரு?!!'... 'தெறிக்கவிடும் மீம்ஸுகளால்'... 'ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 17, 2020 07:53 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

Fans Brutally Troll Ravi Shastri After Prithvi Shaw Got Out For Duck

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மயங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்க, இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பிரித்வி ஷா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். முன்னதாக இந்தப் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பேசிய சுனில் கவாஸ்கர், துவக்க வீரராக பிரித்வி ஷாவை களமிறக்குவது சரியான முடிவாக இருக்காது, அவரின் ஷாட்கள் திருப்திகரமானதாக இல்லை எனவும், ஷுப்மன் கில், மயங்க் அகர்வார் ஓபனர்களாக களமிறங்கினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Fans Brutally Troll Ravi Shastri After Prithvi Shaw Got Out For Duck

இந்நிலையிலேயே இந்திய அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டு, ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு வழங்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரித்வி ஷா இரண்டாவது பந்திலேயே டக்-அவுட் ஆக, அதற்கு ரவி சாஸ்திரியை ரசிகர்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். திறமையான பார்மில் உள்ள வீரர்கள் இருக்கும்போது சமீபமாகவே சொதப்பி வரும் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக 2018ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி கொடுத்த ஒரு பேட்டி ஒன்றில், சச்சின்-சேவாக்-லாரா கலவையில் பிரித்வி ஷா விளையாடுகிறார் எனத் தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்டே தற்போது ரசிகர்களை அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fans Brutally Troll Ravi Shastri After Prithvi Shaw Got Out For Duck | Sports News.