VIDEO : "அன்னைக்கி தூரத்துல இருந்து 'தல' 'பேட்டிங்'க பாத்தேன்... இன்னைக்கி இவ்ளோ பக்கத்துல..." றெக்க கட்டிப் பறந்த 'வருண்',,... வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக இளம் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் டி 20 அணிக்காகவும் வருண் சக்ரவர்த்தி தேர்வாகியுள்ள நிலையில், நேற்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியை ஆட்டமிழக்க செய்தார். முன்னதாக இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியிலும் தோனியை வருண் தான் அவுட் செய்திருந்தார்.
அந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் பேசிய வருண், மூன்று வருடங்களுக்கு முன் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே தான் சேப்பாக்கம் சென்றதாகவும், தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தோனியுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்றைய போட்டி முடிவடைந்த பின்னரும், வருண் சக்ரவர்த்தி மற்றும் தோனி ஆகியோர் சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோவை கொல்கத்தா அணி தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. 'முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ரசித்தது முதல் இப்போது வரை' என அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சீசனில் சென்னை அணியின் போட்டி முடிவடைந்த பின்னர், தோனி எதிர் அணியிலுள்ள இளம் வீரர்களுடன் உரையாடி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருவது போல இந்த வீடியோவும் ரசிகர்களிடம் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.
From admiring him from the stands at Chepauk, to now...😍@chakaravarthy29's fairytale continues!#KKR #Dream11IPL #CSKvKKR pic.twitter.com/rk37xW3OQ7
— KolkataKnightRiders (@KKRiders) October 29, 2020

மற்ற செய்திகள்
