#DEFINITELYNOT... இந்திய அளவில் 'டிரெண்ட்' ஆன வார்த்தைக்கு பின் இருந்த 'கேள்வி',,. "நான் கேட்க காரணமே இது தான்..." 'விளக்கம்' சொன்ன 'வர்ணனையாளர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் சமயத்தின் போது தோனியிடம், போட்டி வர்ணனையாளர் டேனி மோரிசன், 'சிஎஸ்கே அணிக்காக இது தான் உங்கள் கடைசி போட்டியா?' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, 'நிச்சயமாக இல்லை (Definitely Not)' என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி திடீரென தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல் பங்கேற்க மாட்டார் என தகவல் பரவி வந்தது. ஆனால், தோனியே இதுகுறித்து அளித்துள்ள பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், தோனி சொன்ன #DefinitelyNot என்ற வார்த்தையை இந்திய அளவில் ட்விட்டரில் தோனி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே கேள்வியில் தோனி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனி மோரிசன் அந்த கேள்வியை தான் கேட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
'அந்த கேள்வி மிகவும் தேவையான ஒன்று. சிஎஸ்கே அணி இத்துடன் சீசனில் இருந்து வெளியேறவுள்ள நிலையில், பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கேள்வியும், எதிர்பார்ப்பும் இதுவாகத் தான் இருக்கும். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தாமதமாக துபாயில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம். அதற்கு 6 முதல் 7 மாதங்கள் மட்டுமே உள்ள காரணத்தால் தான் தோனி அடுத்த சீசனில் தன்னால் ஆட முடியும் என கூறியிருப்பார்' என டேனி மோரிசன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
