‘நிழலுலக தாதாக்களின்’ உருவம் பொறித்த ‘தபால் தலைகள்’!.. ‘பாசக்கார உறவினர் செய்துவிட்டு போன சம்பவம்!’.. கொந்தளிப்பில் அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தாதாக்களின் புகைப் படங்களை அஞ்சலகத்தின் தபால்தலையில் வெளியிடக் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிழலுலக தாதா சேட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கியின் உருவம் பொறித்த தபால் தலைகள் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரிலுள்ள அஞ்சலத்தில் வெளியிடப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மை ஸ்டாம்ப்’ எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மக்களாகிய நாம் நமது அல்லது நமது உறவினர், மற்றும் நண்பர்களின் புகைப்படத்தை அச்சிட்டு‘நமக்கு நாமே’நம் தபால் தலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படும்.
அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, பின்னர் அனைத்து தகவல்களும் ஆராயப்பட்ட பின்னரே, தபால்தலை தயாரித்து வெளியிடப்படும். இதற்கு பல்வேறு வரம்புகளும் விதிகளும் இருக்கின்றன. ஆனால், இப்படி இரண்டு கேங்ஸ்டர்ஸ்களின் புகைப்படங்கள் தபால்தலைகளாக அச்சிடப்பட்ட சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து அஞ்சல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக 600 ரூபாய் கட்டணம் செலுத்தி, மர்ம நபர் ஒருவர் தான் இந்த 2 தாதாக்களின் புகைப்படங்களை கொடுத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. எனினும் அவ்வாறு கொடுக்கப்படும் புகைப்படங்களை நிராகரிக்கும் முழு உரிமை தபால்துறைக்கு உண்டு. ஆனால் அந்த புகைப்படங்களில் இருந்தவர்களில் ஒருவர் தற்போது மும்பை சிறையில் இருக்கும் `நிழலுலக தாதா’ என்றழைக்கப்படும் சோட்டா ராஜன் , மற்றொருவர் உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு கொல்லப்பட்ட பஜ்ரங்கி என்பவர்.
ஆனால் இந்த இருவரின் பெயர்களை முறையே பிரேம் பிரகாஷ் சிங் (எ) முன்னா பஜ்ரங்கி மற்றும் ராஜேந்திர நிகால்ஜே (எ) சோட்டா ராஜன் என, இவர்களது உறவினர் ஒருவர் தான் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். இதனால் இருவரின் உருவம் பொறிக்கப்பட்ட 12 தபால் தலைகள் அச்சிடப்பட்டுவிட்டன. உ.பி அஞ்சல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.