'நாலு பேர் நாலுவிதமா என்ன பத்தி பேசுவாங்க'... 'ஆனாலும் பரவாயில்லை'... 'ரஜினி எடுத்துள்ள அதிரடி முடிவு'... ட்விட்டரில் வெளியான நெகிழ்ச்சி கடிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாகப் படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவிலிருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது அதாவது ‘நெகட்டிவ்’ என்று தெரியவந்தது.
இருந்தபோதிலும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதற்கிடையே ரஜினிகாந்த்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 25-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் ரஜினிகாந்த்துக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருடைய உடல்நலம் நன்கு தேறியுள்ளது. 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியிலிருந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். இந்த சூழ்நிலையில் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை நம்பி வருபவர்களைப் பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்வேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020

மற்ற செய்திகள்
