‘அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே’... ‘ஆஸி. ஊடகங்களை தவிடுபொடியாக்கி’... ‘முதல் ஆளாக இந்திய கேப்டன் ரஹானே செய்த சாதனை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 30, 2020 12:06 PM

முல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், ஆஸ்திரேலியர் ஒருவர்தான் இந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியரான ரஹானே முதல் ஆளாக வென்றிருக்கிறார்.

Ajinkya Rahane Becomes First Cricketer to Win Mullagh Medal

முதல் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியதுடன் கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், கேப்டனாக பொறுப்பேற்று ரஹானே தலைமையில் இந்திய அணி பாக்ஸிங் டே டெஸ்டில் களமிறங்கியது. தொடக்க முதலே தனது அபார பந்து வீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை  8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை ரஹானே வென்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்படும் வீரருக்கு முல்லாக் விருது வழங்கி கௌரவிக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டாது டெஸ்டில் சதம் அடித்த அஜிங்கிய ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராக அந்த விருதை அவர் தட்டிச் சென்றார்.

Ajinkya Rahane Becomes First Cricketer to Win Mullagh Medal

முல்லாக் என்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர். அவரது நினைவாக இந்த விருது, இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் தான் வாங்குவார்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் மார்தட்டின. இதனை தவிடுபொடியாக்கி இந்தியாவின் பொறுப்பு கேப்டன் ரஹானே தட்டிச்சென்றுள்ளார். இந்த விருதினை பெரும் முதல் இந்தியர் இவரே.

ஜானி முல்லாக் இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரை சேர்ந்தவர். 1868-இல் உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் ஜானி முல்லாக். இந்த பழங்குடியினர் அணி அதே ஆண்டே தனது முதல் சர்வதேச பயணத்தை பிரிட்டன் மேற்கொண்டு பல போட்டிகளில் பங்கேற்றது.

Ajinkya Rahane Becomes First Cricketer to Win Mullagh Medal

ஆஸ்திரேலியா அணி உலக அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்த ஜானி முல்லாக் மற்றும் அவரது பழங்குடியினர் அணி முக்கிய பங்காற்றியது. ஜானி முல்லாக் 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 47 போட்டிகளில் 45 போட்டிகளில் பங்கேற்றார். அதில் 1,698 ரன்களை எடுத்ததுடன் 23.65 சராசரி மற்றும் 245 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ajinkya Rahane Becomes First Cricketer to Win Mullagh Medal | Sports News.