'சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'பெண் காவலர் கைது'?... பரபரப்பு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி வழக்கு தொடர்பான விசாரணையை நடந்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி நடத்திய விசாரணையின் அடிப்படையில் அதிரடி கைதுகள் நடைபெற்றதது.
இந்நிலையில் தற்போதைய விசாரணை சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில், சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகப் பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ நடத்திய விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் காவலர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 காவலர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. எதற்காக விசாரணை கைதிகள் தாக்கப்பட்டார்கள், எவ்வாறு தாக்கப்பட்டனர்? உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.