'அரிசி வியாபாரிக்கு 350 கோடி கடன் கொடுத்த வங்கிகள்'... 'பெரிய ட்விஸ்ட் வச்ச வியாபாரி'... விழிபிதுங்கி நிற்கும் அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகனரா வங்கி உட்பட ஐந்து வங்கிகளில் ரூ.350 கோடிக்கும் மேல் கடன் வாங்கிய அரிசி வியாபாரி செய்த மோசடி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் நிறுவனத்தின் இயக்குநர் மன்ஜித் சிங் மக்னி. இவரின் மகன் குவிந்தர் சிங் மக்னி மருமகள் ஜாஸ்மீட் கௌர் ஆகியோர் அதிகாரி ஒருவருடன் சேர்ந்து ஆறு வங்கிகளில் ரூ.350 கோடி அளவுக்குக் கடன் வங்கியுள்ளார்கள்.
போலியான இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்கள் கொடுத்து கனரா வங்கியில் ரூ.175 கோடியும், ஆந்திரா வங்கியில், ரூ.53 கோடியும், யூனியன் வங்கியில் ரூ.44 கோடியும், ஓரியண்டல் வங்கியில் 25 கோடியும், ஐடிபிஐ வங்கியில் ரூ.14 கொடியும், யுசிஓ வங்கியில் 41 கோடியும் கடன் பெற்றுள்ளனர்.
இதையடுத்து வங்கிகளில் வாங்கிய கடனில், வங்கிகளின் ஒப்புதலைப் பெறாமலே தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளை விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வங்கித் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட காலதாமதமான நடவடிக்கை காரணமாக, மோசக்காரர்கள் கனடாவுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில் ரிசர்வ் பேங்க் தரப்பில் சிபிஐ- ல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி மார்ச் 30, 2019 ம் தேதி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட பிறகும், கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்தே வங்கித் தரப்பில் சிபிஐ -யை அணுகி புகார் கொடுத்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையும் சமீபத்தில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வங்கிகள் தாமதமாக அளித்த புகார் மற்றும் 5 மாத இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட மோசக்கார தொழிலதிபர் குடும்பத்துடன் கனடா நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவர்களுக்கு 350 கோடி ரூபாய் கடனும் வழங்கி விட்டு அவர்களைப் பிடிக்கவும் முடியாமல் வங்கிகள் தற்போது விழிபிதுங்கி நிற்கிறது.

மற்ற செய்திகள்
