சரணடைகிறாரா காவலர் 'முத்துராஜ்'? - 'சாத்தான்குளம்' விவகாரத்தில் அடுத்த பரபரப்பு; 'லேட்டஸ்ட்' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததன் பெயரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதில் போலீஸ் மூலம் தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவலர் முத்துராஜ் என்பவர் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும், முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. ஆனால், வழக்கில் தற்போது தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ் விரைவில் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
