'நான் நாகர்கோவில் காசியோட தங்கச்சி பேசுறேன்'... 'எங்க அண்ணனோட வழக்குல'... பரபரப்பு வீடியோ வெளியிட்ட காசியின் தங்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் தான் நாகர்கோவில் காசியின் வழக்கு. பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் காசி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த நிலையில், அதிரடி திருப்பமாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். காசியின் நண்பர்களாக ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காசியின் தந்தை தங்க பாண்டியனையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தார்கள். தவறு செய்த மகனைத் திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் தந்தையே ஆதாரங்களை அழித்து காசியைக் காப்பாற்ற முயன்ற வழக்கில் போலீசார் அவரை கைது செய்தார்கள்.
இந்நிலையில் போலீசார் தங்களை, சாத்தான்குளத்தில் நடந்தது போன்று உங்களுக்கும் நடக்கும் என மிரட்டுவதாகக் காசியின் தங்கை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''தங்களின் வீட்டிற்கு வந்த போலீசார் தனது தாயைத் தாக்கியதாகவும், சாத்தான்குளம் சம்பவம் போல உங்களுக்கும் நடக்கும் எனக் கூறியதாகவும், எனவே தமிழக அரசு எங்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' எனவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
