என்ன கதவெல்லாம் திறந்து கிடக்கு.. மகள் கல்யாணத்தை முடிச்சிட்டு வீடு திரும்பிய குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகள் திருமணத்துக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய குடும்பத்துக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகர் இரட்டை ரோட்டில் வசிப்பவர் மனோன்மணி. இவர் தனது கணவர் சின்னதுரையை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மகளும், பாரதிராஜா என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் பாரதிராஜா கனடாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழலில் மகள் வெண்ணிலாவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மகளின் திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவரும் காரைக்குடிக்கு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது மனோன்மணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்த மனோன்மணி, உடனே வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது திருமணம் செய்துள்ள தனது மகளுக்கு கொடுக்க வைத்திருந்த 70 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்ததுள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர துணை காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் மனோன்மணி குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
