சத்தம் கேட்டுற கூடாதுன்னு எப்படி கதவை திறந்திருக்காங்க பாருங்க.. தினுசு தினுசா யோசிக்கும் கொள்ளையர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நள்ளிரவில் வீட்டின் கதவை நூதன முறையில் திறந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலிச்சரடு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மனைவி ரமாராணி. நேற்று கரிகாலன் வெளியூர் சென்றிருந்ததால், இரவு உறவுக்கார பெண்ணுடன் ராமாராணி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இந்த சூழலில் நள்ளிரவு வீட்டின் பின்பக்க மர கதவுக்கு இடையே கடப்பாறையை நுழைத்த கொள்ளையர்கள், சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக,முடிச்சுகள் போட்டு இணைக்கப்பட்ட மெல்லிய துணியை உள்ளே நுழைத்து கதவின் மேல் புற தாழ்ப்பாளை திறந்துள்ளனர். இதனை அடுத்து மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த ராமாராணியின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி சரடை பிடித்து இழுத்தனர்.
உடனே கண்விழித்து கூச்சலிட்ட ராமாராணி தாலியை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். அதனால் அதன் ஒரு பகுதியை மட்டும் கொள்ளையர்கள் பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
