'இது மட்டும் உங்க வீட்ல இருந்துச்சுன்னா...' 'நீங்க பல கோடிக்கு அதிபதி சார்...' 'ரேட் ஜஸ்ட் 6 கோடி தான்...' - சினிமாவை மிஞ்சிய நூதன மோசடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 16, 2020 03:58 PM

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் இரிடியம் வாங்கித்தருவதாக கூறி 6 கோடி மோசடி செய்துள்ளார்.

ramanathapuram man cheated 6 crores claim buying iridium

ராமநாதபுரம் மாவட்டம் வனசங்கரியம்மன் கோவிலை சேர்ந்தவர் முனியசாமி என்பவர், விமான பாகங்கள் செய்யும் லண்டன் நிறுவனத்தில் பணி செய்வதாக கூறி ஊரை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கரூரை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் பணம் பொருள் அள்ளித்தரும் இரிடியம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இரிடியத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் பல கோடி ரூபாய்க்கு அதிபராகலாம் என்றெல்லாம் கூறி, அவரை ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். அதன் மூலம் சுமார் ரூ.6 கோடியை மதன் குமாரிடம் இருந்து சுருட்டியுள்ளார் முனியசாமி.

முனியசாமி 6 கோடி வாங்கி 5 ஆண்டுகள் முடிந்த போதிலும், இரிடியத்தை கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் முனியசாமி தன் நண்பர்களுடன் சேர்ந்து மதனை பல வகைகளில் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முனுசாமி குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியசாமி மற்றும் அவரின் நண்பர் வீர பாபு ஆகியோரை தேடிவந்துள்ளனர். இதையறிந்த முனியசாமி, வீர பாபு தலைமறைவாகியுள்ளனர். மேலும் அவர்களின் கூட்டாளி சுகுமாரை மட்டும் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ramanathapuram man cheated 6 crores claim buying iridium | Tamil Nadu News.