‘பிரதமர்’ மோடியைத் தொடர்ந்து... உலகின் ‘பிரபலமான’ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ‘ரஜினிகாந்த்’...
முகப்பு > செய்திகள் > உலகம்டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எப்படி பிழைத்திருப்பது என கற்றுத்தருவார். கடந்த ஆண்டு பியர் கிரில்ஸுடன் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற இருப்பதாகவும், அதில் 2 நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
