'சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு'... 'சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன சிறுவன்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 22, 2021 12:23 PM

தனது உருவத்தை க்யூப் பெட்டகங்களைக் கொண்டு வடிவமைத்த சிறுவனுக்கு ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாகத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Rajini wishes kerala boy for Rubiks cube mosaic portrait

எந்த ஒரு புது முயற்சியை யார் மேற்கொண்டாலும் அவர்களை மனம் திறந்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அதே போல தனது ரசிகர்கள் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் கூட உடனே அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து ஆறுதல் கொடுப்பது ரஜினியின் வழக்கம்.  அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய ரசிகர் ஒருவர் மும்பையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இது தொடர்பான அவருடைய ட்வீட்கள் பெரும் வைரலாக, உடனடியாக ரஜினி அவர் பூரண நலம்பெற ஆடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது கேரளாவைச் சேர்ந்த அத்வைத் மானழி என்ற சிறுவனின் செயலால் நெகிழ்ந்த ரஜினி, அவரைப் பாராட்டி ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்வைத் மானழிக்கு க்யூப்களை வைத்து உருவங்களை உருவாக்குவது நிறையவே பிடிக்கும்.

Rajini wishes kerala boy for Rubiks cube mosaic portrait

இதில் தனக்குப் பிடித்தமான நடிகர் ரஜினியை 300 க்யூப்கள் கொண்டு உருவாக்கி அதனைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். க்யூப்களால் ரஜினியை உருவாக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றுடன் அத்வைத் மானழி கூறியிருப்பதாவது: "ரஜினிகாந்த் முகம் ரூபிக்ஸ் க்யூபி மொஸைக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. எனது 300 க்யூப்களை வைத்து என்றும் இளமையான நடிகரின் உருவத்தை உருவாக்கிய வாய்ப்பு கிடைத்தது என் ஆசீர்வாதம், மிக்க மகிழ்ச்சி.

சார், என் பெயர் அத்வைத் மானழி. பவன்ஸ் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி, காக்கநாடு, கொச்சி, கேரளாவில் 9ஆம் வகுப்பு மாணவன். எனக்கு க்யூப் புதிர் விளையாட்டு பிடிக்கும். க்யூப்களை வைத்து உருவப் படங்களை உருவாக்குவது எனக்குப் பிடிக்கும். இன்று, 300 க்யூப்களை பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்க முயன்றேன். உங்களுக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறேன்". இவ்வாறு அத்வைத் மானழி தெரிவித்தார்.

Rajini wishes kerala boy for Rubiks cube mosaic portrait

இதற்கிடையே அத்வைத் மானழியின் வீடியோ ரஜினியின் பார்வைக்குச் சென்றது. உடனே, அத்வைத் மானழியைப் பாராட்டி ரஜினி ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான பணி அத்வைத். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ" என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு சிறுவன் அத்வைத் மானழியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajini wishes kerala boy for Rubiks cube mosaic portrait | Tamil Nadu News.