'திரைத்துறையில் சாதனை'... 'நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசின் உயரிய விருது'... மத்திய அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்திற்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
Happy to announce #Dadasaheb Phalke award for 2019 to one of the greatest actors in history of Indian cinema Rajnikant ji
His contribution as actor, producer and screenwriter has been iconic
I thank Jury @ashabhosle @SubhashGhai1 @Mohanlal@Shankar_Live #BiswajeetChatterjee pic.twitter.com/b17qv6D6BP
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 1, 2021
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 1, 2021
Superstar @rajinikanth gets #DadasahebPhalke award.#Rajinikanth pic.twitter.com/eWKDj0zYev
— IndiaToday (@IndiaToday) April 1, 2021
Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality...that’s Shri @rajinikanth Ji for you.
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 1, 2021
திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.
தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.