'ரொம்ப திமிரா இருக்க கூடாது...' 'அவங்க ரெண்டு விக்கெட் கூட வச்சிருந்தாங்கன்னா...' நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்...? - தோனி காட்டம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (21-0402021) கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே திரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ஆரம்பம் முதலே அடித்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டது. மொத்தமாக இருபது ஓவர் முடிவில் 220 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து பெரும் இலக்கோடு களம் இறங்கிய கொல்கத்தா அணி அடுத்தது ஐந்து விக்கெட்டுகள் வெறும் 30 ரன்களிலேயே விழுந்தது. அடுத்தது விளையாடிய ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் சென்னை அணிக்கு மரண பயத்தை காட்டினார்கள். ஒருகட்டத்தில் சாம் கர்ரன் ரஸல் விக்கெட்டை வீழ்த்த, இனிமேல் எளிதாக வென்றுவிடலாம் என நம்பிக்கொண்டிருக்க அதற்கு அடுத்து இறங்கிய கம்மின்ஸ் பேட்டில் இருந்து இடி வெட்டியது. நாலா பக்கமும் சிக்ஸர் மழை. எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் கடைசியில் வென்றது.
போட்டிக்கு பேசிய கேப்டன் தோனி, இது போன்ற ஆட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் டிவிஸ்ட் நடக்கலாம். இதெல்லாம் சகஜம். 16-வது ஓவரில் இருந்தே பாஸ்ட் பவுலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையில்தான் மோதல் இருந்தது.
இருவரில் யார் நன்றாக வீசுவார்கள் என்ற நிலை இருந்தது. உங்களால் நிறைய விஷயங்களை செய்ய முடியாது. வித்தியாசமான பீல்டிங்கை நிற்க வைக்க முடியாது. எந்த அணி சிறப்பாக திட்டங்களை வகுக்கிறதோ அந்த அணிதான் கடைசியில் வெற்றிபெறும்.
அவர்களிடம் கொஞ்சம் விக்கெட்டுகள் கூடுதலாக இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் கிரிக்கெட்டில் நிறைய பார்த்துவிட்டோம். நிறைய ஸ்கோர் அடித்துவிட்டோம் என்ற மிதப்பில் இருக்க கூடாது. நாம் ஒரு ஸ்கோர் எடுத்தால் அதை எதிரணியும் எடுக்க முடியும்.
இதனால் மிதப்பில் இல்லாமல் தாழ்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதிக ஸ்கோர் அடித்தாலும் திமிராக இருக்க வேண்டாம் என்பதே எங்கள் அணிக்கு சொல்லும் அறிவுரை. நாங்கள் ஆரம்பித்திலேயே நிறைய விக்கெட்டை எடுத்தோம்.
ஆனாலும் பிக் ஹிட்டர்கள் அதன்பின்தான் களமிறங்கினார்கள். அவர்கள் அடித்துதான் ஆடுவார்கள். அதை மாற்ற முடியாது. நம்மால் அதை எதுவும் செய்ய முடியாது, என்று தோனி குதெரிவித்துள்ளார்.
நேற்று சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் 220 எடுத்த காரணத்தால் கொஞ்சம் மேம்போக்காக காணப்பட்டனர். எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்தனர். இதைதான் தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.