'படிச்சு படிச்சு சொன்னேன்... அவன் கேட்கவே இல்ல'... ஆதங்கத்தில் தந்தை எடுத்த முடிவு!.. அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டத்தில் மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் மேல்நிலைவயல் இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 54). இவருடைய மனைவி இந்திராகாந்தி. இவர்களுக்கு உதயகுமார் (28), அருண்குமார் (26) என 2 மகன்கள். இதில் மூத்த மகன் உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அருண்குமார் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். டிரைவரான இவர், கிடைக்கும் பணத்தில் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அருண்குமாரை அவரது தந்தை கண்டித்தார். மது பழக்கத்தை கைவிடாததால் மகனுக்கும், தந்தைக்கும், தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
பகலில் இருவரையும் அக்கம், பக்கத்தினர் பார்த்து உள்ளனர். மாலைநேரம் ஆனதால் பசியால் வீட்டில் இருந்த மாடுகள் சத்தம்போட்டன. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது பாலச்சந்திரன் தூக்கில் தொங்கியபடியும், அருண்குமார் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் அருண்குமாரை கட்டையால் அடித்து கொன்று விட்டு, செய்வதறியாமல் பாலச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
