காலை வேலைக்கு வந்த பெண் கண்ட காட்சி.. நள்ளிரவு வீட்டின் ஓட்டை பிரிச்சு நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் மேற்கூரையை பிரித்து தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | “நீ சின்னப் பையன், அது மாதிரி நடந்துக்கோ”.. ஹர்சல் படேலுடன் சண்டை.. முதல் முறையாக ரியான் பராக் விளக்கம்..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போல்நாயக்கன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயியான இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவியும், முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி என்ற 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருடைய மனைவியும் இறந்துவிட்டதால், தோட்டத்தில் இருக்கும் வீட்டில் முத்துசாமி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு முத்துசாமி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துசாமியை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காலையில் வழக்கம் போல் தோட்டத்து வேலைக்கு வந்த பெண் ஒருவர், முத்துசாமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து முத்துச்சாமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், முத்துசாமி உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் திருடு போகாமல் உள்ளதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தடயங்களை சேகரித்து மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘கூலித்தொழில்.. உல்லாச வாழ்க்கை’.. வாகன சோதனையில் சிக்கிய இருவர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

மற்ற செய்திகள்
