"என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்குவங்க மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து புழக்கத்தில் விட முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடைக்காரருக்கு வந்த சந்தேகம்
மேற்குவங்க மாநிலம் ஷியாம் நகரில் உள்ள பொம்மை கடைக்கு நேற்று ஒருவர் வந்திருக்கிறார். கடையில் இருந்த பொம்மைகளை பார்வையிட்ட அவர், அவற்றுள் சிலவற்றை தேர்ந்தெடுத்து உள்ளார். அதன் பிறகு கடையின் உரிமையாளரிடத்தில் தான் தேர்ந்தெடுத்த பொம்மைகளின் தரம் மற்றும் விலை குறித்து பேசியுள்ளார் அந்த நபர். அதன், பிறகு பொம்மைகளை தான் வாங்கிக்கொள்வதாக கூறிய அந்நபர், தனது பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் ஒன்றை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார்.
அதிர்ச்சி
பொம்மை வாங்கியவரிடமிருந்து 500 ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்ட கடைக்காரருக்கு அந்த ரூபாய் நாட்டின் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. நல்ல வெளிச்சத்தில் ரூபாய் நோட்டை ஆராய்ந்த கடைக்காரர் அது போலியான ரூபாய் நோட்டுதான் என கண்டறிந்துள்ளார். இதனால் கடுப்பான அவர், பொம்மை வாங்க வந்தவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும், காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிஷ்ணுபூர் பகுதி காவலநிலைய அதிகாரிகள் கடைக்கு விரைந்து வந்திருக்கின்றனர்.
விசாரணை
இதனையடுத்து, பொம்மை வாங்க வந்தவரை காவல்துறையினர் விசாரித்ததில் அவர், மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த குருபதா அசார்ஜீ என்பது தெரியவந்திருக்கிறது. பின்னர் 59 வயதான அசார்ஜீயின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அசார்ஜீயின் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரிண்டர் மற்றும் 1,65,560 ரூபாய் போலி நோட்டுகள் மற்றும் பிற கருவிகளை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வழக்கு பதிவு
இந்நிலையில், போலி ரூபாய் நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சித்த அசார்ஜீயின் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சதி திட்டத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
Also Read | "ரொம்ப மோசமா Feel பண்றேன்" .. எலான் மஸ்க் போட்ட புதிய திட்டம்..நடுங்கிப்போன ஊழியர்கள்..!