3 நாளா ஒரே இடத்தில் நின்ன கார்.. திடீரென வீச ஆரம்பித்த துர்நாற்றம்.. "கதவ திறந்து உள்ள பாத்தா".. அதிர்ச்சி சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் சுமார் மூன்று நாட்களாக கார் ஒன்று கேட்பாரற்று கிடந்த நிலையில், அதனைத் திறந்து பார்த்த போது, கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Also Read | "நாய் மாதிரி மாறியே ஆகணும்.." மனிதனின் வினோத ஆசை.. 12 லட்ச ரூபாய் செலவு.. வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி சாலை, பிளாக் தண்டர் அருகே கார் ஒன்று கடந்த மூன்று நாட்களாக, ஒரே இடத்தில் நின்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திடீரென அந்த காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசவும் தொடங்கி உள்ளது. அப்பகுதியில், நடைப்பயிற்சி செய்த சிலர், துர்நாற்றம் வீசுவதை அறிந்து சந்தேகம் அடைந்துள்ளனர்.
காருக்குள் துர்நாற்றம்
இதன் பின்னர், மர்ம கார் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த காரினை ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து, காரை திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஒரு ஆண் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அப்பகுதி மக்களும் இதனை அறிந்து பதறி போயினர். அதே போல, அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த நபர் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனையடுத்து, அந்த நபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீலகிரி மாவட்டம் காட்டேரி கிராமம், தூரட்டி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரஞ்சித் என்பது தெரிய வந்தது.
போலீசார் தீவிர விசாரணை
இவர் கூடலூர் பகுதியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன், ஊட்டியில் இருந்து கோவைக்கு தனது காரை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார் ரஞ்சித்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது அவர் உயிரிழந்த நிலையில் காருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார். வண்டி ஓட்டி விட்டு வந்த ரஞ்சித், பின் சீட்டில் உயிரிழந்து இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து, தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
