“நீ சின்னப் பையன், அது மாதிரி நடந்துக்கோ”.. ஹர்சல் படேலுடன் சண்டை.. முதல் முறையாக ரியான் பராக் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 06, 2022 04:12 PM

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.

Riyan Parag reveals altercation with Harshal Patel in IPL 2022

Also Read | ‘எப்படி இவ்ளோ நகை, பணம் கெடச்சது?’.. கணவன் சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன மனைவி.. உடனே செஞ்ச சிறப்பான காரியம்..!

இந்தியாவில் நடந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வந்தார். இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ரியான் பராக்கிற்கு அறிவுரை வழங்கினர்.

Riyan Parag reveals altercation with Harshal Patel in IPL 2022

இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேலை ரியான் பராக் சீண்டினார். அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இதைப் பார்த்த சக வீரர்கள் ரியான் பராக்கையும், ஹர்சல் படேலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரின் கோபமும் இதோடு முடியவில்லை. அப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. வழக்கமாக போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி செல்வார்கள். அந்த வகையில் ரியான் பராக் பெங்களூரு அணி வீரர்களிடம் கைக்குலுக்கி வந்தார். அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டிய போது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இந்த வீடியோ அப்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Riyan Parag reveals altercation with Harshal Patel in IPL 2022

இந்த நிலையில், ஹர்சல் படேலுடனான மோதல் குறித்து ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘கடந்த ஆண்டு நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் அவுட் ஆனேன். அப்போது என்னை டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கை காட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. ஹோட்டலுக்கு வந்து டிவியில் பார்த்த போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது. மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. அதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இதுதான் மோதலுக்கு காரணம்.

அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து, “நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்” என்று கூறினார். ஆனால் போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கைக்குலுக்காமல் சென்றுவிட்டார். அது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக எனக்கு தெரிந்தது’ என ரியான் பராக் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | என்னது ‘லிப்ஸ்டிக்’ தாவரமா..! இந்தியாவில் 100 வருசத்துக்கு அப்புறம் கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா..?

Tags : #RIYAN PARAG #HARSHAL PATEL #IPL 2022 #RCB #RR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Riyan Parag reveals altercation with Harshal Patel in IPL 2022 | Sports News.