அம்மாடியோவ்..! இறந்த யாசகர் வீட்டில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்.. விடிய விடிய எண்ணியும் எண்ணி முடிக்க முடியல.. மிரண்டு போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 04, 2022 09:44 AM

யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police found bundles of money at beggar house in Andhra Pradesh

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கரப்பா மண்டலம் வேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் சாது ராமகிருஷ்ணா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலங்கி கிராமத்திற்கு வந்த ராமகிருஷ்ணா அங்கேயே தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். வேலங்கி கிராம மீன் மார்க்கெட் அருகில் சிறிய அறையில் தங்கி அருகிலுள்ள ஆசிரமத்தில் உணவருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று மாரடைப்பு காரணமாக ராமகிருஷ்ணா உயிரிழந்தார்.

இதனை அடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் உதவியுடன் தகனம் செய்தனர். அப்போது ராமகிருஷ்ணா வீட்டில் கிடைத்த 2 பையில் நூற்றுக்கணக்கான பாலிதீன் கவர்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் உள்ளூர் மக்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய எண்ணியும், முழுமையாக பணத்தை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பணத்தை பையில் போட்டு சீல் வைத்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். உயிரிழந்த யாசகர் வீட்டில் கட்டுகட்டாக பணம் இருந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #BEGGAR #ANDHRA PRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Police found bundles of money at beggar house in Andhra Pradesh | India News.