கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வீட்டின் உரிமையாளரை தள்ளிவிட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பாரதி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருப்பதிக்கு சென்றுள்ள நிலையில், ராஜ்குமார் மட்டும், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள முடி திருத்தம் செய்யும் கடைக்கு சென்றுள்ளார்
இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நின்றிருந்தார். உடனே ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டு அவர் வெளியே ஓடினார். அங்கு, தயார் நிலையில் இருந்தவரின் பைக்கில் ஏறி தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பீரோ அருகே ஒரு செல்போன் கிடந்துள்ளது. அந்த செல்போனை சோதனை செய்தபோது, அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படத்தில் இருந்த நபர் ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து செல்போன் நம்பரை வைத்து அந்த நபரின் வீட்டு முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெரு பகுதியை சேர்ந்த வடிவேல் பாண்டியன் (வயது 31) என்பவரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ராஜ்குமார் வீட்டில் திருடியதை வடிவேல் பாண்டியன் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து திருடப்பட்ட நகைகளை அவரிடமிருந்து போலீசார் மீட்டனர். மேலும் அவருடைய கூட்டாளி வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். திருட சென்ற இடத்தில் விட்டு சென்ற செல்போனால் திருடர்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!

மற்ற செய்திகள்
