தகாத உறவை கண்டித்த தம்பி.. ஆத்திரத்தில் ஆள் வைத்து ‘அக்கா’ செஞ்ச காரியம்.. பரபரக்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தகாத உறவை கண்டித்த தம்பியை அக்காவே ஆள் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பேகம்பூரை சேர்ந்த சர்தார் அவரது நண்பர்களான யோகராஜ், கௌதம், ரியாஸ் ஆகியோர் சூர்யாவை வெட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சூர்யாவின் அக்காவான மனிஷாவுக்கும், சர்தாருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
மனிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். இந்த சூழலில் சகோதரியின் தகாத உறவை மனிஷாவின் தம்பி சூர்யா கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனிஷா, தம்பி சூர்யாவை கொல்ல சர்தாரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது இதற்கு மனிஷாவின் மற்றொரு சகோதரியான சீமா தேவியும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் சர்தார் தனது நண்பர்களுடன் சூர்யாவை வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே போலீசாரிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மனிஷா மூட்டை பூச்சி மருந்தை குடித்ததாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மனிஷா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சகோதரிகள் இருவரும் சேர்ந்து தம்பி சூர்யாவை ஆள் வைத்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மனிஷா மற்றும் சீமா தேவி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தகாத உறவை கண்டித்த தம்பியை அக்காவே ஆள் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
