‘கூலித்தொழில்.. உல்லாச வாழ்க்கை’.. வாகன சோதனையில் சிக்கிய இருவர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 06, 2022 06:21 PM

பைல்சர் இருசக்கர வாகனங்களை குறி வைத்து இரு இளைஞர்கள் திருடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry police arrested two persons in bike theft case

Also Read | ‘எப்படி இவ்ளோ நகை, பணம் கெடச்சது?’.. கணவன் சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன மனைவி.. உடனே செஞ்ச சிறப்பான காரியம்..!

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட பல்சர் இருசக்கர வாகனங்களை திருடி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றிரவு புதுச்சேரி 100 அடி சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருசக்கர வாகனத்திற்கான உரிய சான்றிதழ்களை கேட்டபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Puducherry police arrested two persons in bike theft case

அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (வயது 38), சிலம்பரசன் (வயது 37) என்பதும், அவர்கள் ஒட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கூலித்தொழில் செய்ய வரும் இவர்கள் முதலியார்பேட்டை, உருளையான் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல்சர் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சங்கர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 பல்சர் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டிற்கும், பைக் திருடும் பணத்தை மது குடிக்கவும், ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

Also Read | “நீ சின்னப் பையன், அது மாதிரி நடந்துக்கோ”.. ஹர்சல் படேலுடன் சண்டை.. முதல் முறையாக ரியான் பராக் விளக்கம்..!

Tags : #PUDUCHERRY POLICE #ARREST #BIKE THEFT CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Puducherry police arrested two persons in bike theft case | Tamil Nadu News.