'ஹலோ...! இங்கெல்லாம் சாப்பிட முடியாதுங்க, கொரோனா வந்திடும்...' 'பார்சல் வேணா தரேன்...' ஆட்களை கூட்டிட்டு வந்து...' 'கடுப்பான கஸ்டமர் செய்த அதிர்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் கொரோனா அச்சம் காரணமாக ஓட்டலில் சாப்பிட அனுமதிக்காததால் ஓட்டலையே அடித்து நொறுக்கிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷிரோலி கிராமத்தில் விஜய் உணவகம் என்ற ஓட்டலில் கொரோனா அச்சம் காரணமாக வெறும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்கேயே சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ஓட்டலின் உரிமையாளர் சாப்பிட வந்தவரிடம் பார்சல் எடுக்கச் சொன்னார், ஆனால் அவர்கள் ஹோட்டலுக்குள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே சென்றுள்ளனர்.
சிறிது நேரம் சென்ற பின் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர், அவரின் நண்பர்களை அழைத்து வந்து கட்டைகளை கொண்டு, ஓட்டலை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக ஓட்டலை சேதப்படுத்திய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
