ஷவர்மாவுக்கு தமிழகத்தில் தடையா? ஷவர்மா பிரியர்களுக்கு அதிர்ச்சி..மா.சுப்ரமணியன் வெளியிட்ட தகவல்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | May 08, 2022 05:19 PM

ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் அதற்கான வழிமுறையை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

People avoid Shawarma says Minister M Subramaniyan

ஷவர்மா

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மாணவி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து  தமிழகத்திலும் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தி சில இடங்களில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். ஷவர்மா சாப்பிட்ட நபர்கள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஷவர்மா விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

People avoid Shawarma says Minister M Subramaniyan

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், "பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். ஷவர்மா உள்ளிட்ட வெளிநாட்டு உணவுகளுக்கு பதிலாக மக்கள் நம் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய காலநிலைக்கு ஏற்ற உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இறைச்சியை பதப்படுத்தும் சேகரிப்பதற்கும் வசதியான காலநிலை இருக்கிறது. நம்மூரில் இளைஞர்களிடையே ஷவர்மா ஆசை அதிகம் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு சில கடைகள் அதற்குரிய வசதிகளை பின்பற்றாமலேயே ஷவர்மா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.

சோதனை

ஷவர்மா சாப்பிட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட செய்திகள் தீயாய் பரவிவந்த நிலையில் தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் உள்ள உணவு கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு உணவகங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் எச்சரிக்கை அளிப்பது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு கடைகள் கண்காணிக்கப்படும். ஷவர்மா விற்பனை செய்பவர்கள் அதற்குரிய குளிர்சாதன வசதியை வைத்திருத்தல் வேண்டும். பழைய இறைச்சியை பயன்படுத்துவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

People avoid Shawarma says Minister M Subramaniyan

சமீப நாட்களாக, ஷவர்மா சாப்பிட்ட மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஷவர்மா தடை செய்யப்படுமா? என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஷவர்மா உள்ளிட்ட வெளிநாட்டு உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருப்பது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

Tags : #SHAWARMA #FOOD #MA.SUBRAMANIYAN #ஷவர்மா #மா.சுப்பிரமணியன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. People avoid Shawarma says Minister M Subramaniyan | Tamil Nadu News.