தூக்க கலக்கத்தில் இருந்த 'HUBBY'.. மனைவி கொடுத்த ஸ்வீட் 'SURPRISE'.. உற்சாகத்தில் திளைத்த கணவன்.. வைரலாகும் 'க்யூட்' வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாபடிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என ஒருவரின் வாழ்க்கை எப்போதுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும்.
![husband reaction after wife surprise about her pregnancy husband reaction after wife surprise about her pregnancy](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/husband-reaction-after-wife-surprise-about-her-pregnancy.jpg)
இதற்கு நடுவே ஒவ்வொருவரின் வாழ்விலும், நிறைய சந்தோஷங்கள், துக்கங்கள், தோல்விகள், வெற்றிகள் என அனைத்தையும் பார்க்க வேண்டிய நிலை, நிச்சயம் வந்து கொண்டு தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக, நாம் எத்தனை கஷ்டங்களை வாழ்வில் சந்தித்திருந்தாலும், சில இன்பங்கள் வரும் வேளையில், அவை அனைத்தும் மறந்து போகும் விடும் அளவிற்கு வழிகளை உருவாக்கி விடும்.
குடும்ப வாழ்க்கையின் தொடக்க புள்ளி..
அப்படி ஒருவர் பெறும் இன்பங்களில் மிக மிக முக்கியமானது, நாம் அப்பா அல்லது அம்மா ஆகப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வது தான். ஒருவரின் வாழ்வில் இரண்டாவது இன்னிங்ஸ் எனப்படும் குடும்ப வாழ்க்கையின் தொடக்க புள்ளி தான் இது.
அதிலும், மிக மிக சர்ப்ரைஸாக இந்த தகவல் நமக்கு வந்து சேர்ந்தால், அந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருந்து வெளியில் வரவே, கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி ஒரு சர்ப்ரைஸில் சிக்கித் தவித்து, இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ஒருவரின் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கண் திறந்ததும் குட் நியூஸ்
மனைவி ஒருவர், தான் கர்ப்பம் ஆனதை அறிந்து கொண்ட பிறகு, அதனை அசத்தலாக கணவரிடம் தெரிவிக்கும் காட்சிகளை நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு மனைவி, தான் கர்ப்பமாக இருப்பதை முதலாவதாக தன்னுடைய கணவரிடம் சொல்கிறார். நல்ல தூக்கத்தில் இருக்கும் தனது கணவரை தட்டி எழுப்பும் மனைவி, தன்னுடைய கையில் இருக்கும் Pregnancy Kit-டை அவரிடம் காட்டுகிறார்.
அதனை வாங்கி பார்த்த கணவர், பாசிட்டிவ் என இருப்பதைக் கண்டு, உச்சக்கட்ட சந்தோஷத்தில் மிதக்கிறார். தூங்கி எழுந்து நாள் ஆரம்பிக்கும் நேரத்தில், இப்படி ஒரு மகிழ்ச்சி செய்தியை அறியும் போது யாராக இருந்தாலும், ஒரு நிமிடம் திக்கித் திணற தான் செய்வார்கள். அப்படி தான் இந்த கணவரும், உற்சாக மிகுதியில் இருந்துள்ளார்.
இந்த ஜோடி, சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமான கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி, வாழ்த்துக்களை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)