ஷவர்மாவை தொடர்ந்து.. பரோட்டா பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி.. கேரளாவை உலுக்கிய அடுத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன், கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே கேரள மாநிலத்தில் நடந்துள்ள மற்றொரு சம்பவம், மீண்டும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரீட் ஃபுட்களை நாளுக்கு நாள் விரும்பி சாப்பிடும் மக்கள் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி, கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், ஷவர்மாவை இரண்டு நாட்கள் சாப்பிட்ட பிறகு, பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் இந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஷவர்மாவிலுள்ள கெட்டுப் போன சிக்கனில் இருந்த ஒரு வைரஸ் தான் மனைவியின் இறப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
மீண்டும் கேரளாவில் அரங்கேறிய சம்பவம்
இதனைத் தொடர்ந்து, கேரளா மட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களிலும் ஷவர்மா கடை மற்றும் உணவகங்களில் கடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கேரளாவிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்போது அரங்கேறியுள்ள சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பரோட்டா பார்சலில் அதிர்ச்சி
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள நெடுமங்காடு நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டு தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் இருந்து, செல்லம்கோட்டையைச் சேர்ந்த பிரியா என்ற பெண்மணி, பரோட்டாவை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற பிறகு, அந்த பார்சலை திறந்து பார்த்த போது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த பொட்டலத்திற்காக பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள் ஒன்றில், பாம்புத் தோல் இருந்ததை கண்டுபிடித்துள்ளார் பிரியா.
அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் ஒன்றையும் பிரியா அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், சம்மந்தப்பட்ட ஹோட்டலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஹோட்டல் மோசமான நிலையில் செயல்படுவது கண்டறியப்பட்டது.
இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமையலறையில் போதிய வெளிச்சம் இல்லை. குப்பைகளும் வெளியே கொட்டப்பட்டிருந்தன. இதனால், ஹோட்டலை மூட உத்தரவிட்டுள்ளோம். மிகவும் மோசமான நிலையில் ஹோட்டலை நடத்தியது பற்றி விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
அந்த ஹோட்டலின் மீதமுள்ள உணவுகள் அனைத்தும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8