"அவரு கொரோனாவால இறந்துட்டாரு,,.. நாங்களே அடக்கம் பண்ணிட்டோம்"... மருத்துவமனை முடிவால் எழுந்த 'சந்தேகம்'?.. அடுத்தடுத்து நடந்த 'ஷாக்' சம்பவங்கள்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![pattukottai family complains prvt hospital maybe stole body organ pattukottai family complains prvt hospital maybe stole body organ](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/pattukottai-family-complains-prvt-hospital-maybe-stole-body-organ.jpg)
இதனைத் தொடர்ந்து, அவர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஜூலை மாத இறுதியில் அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தது. ஆனால், கொரோனா மூலம் உயிரிழந்தவர்களின் சுகாதாரத்துறை பட்டியலில் அந்த நகைக்கடை உரிமையாளரின் பெயர் இடம்பெறவில்லை. இதனையறிந்த அந்த குடும்பத்தினர், அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டியது.
உடல் உறுப்பை திருடுவதற்காக மருத்துவமனை நிர்வாகம், உண்மையை மறைத்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக அவரின் உடலை உடனடியாக தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருந்தனர். மேலும், இந்த புகார் தொடர்பாக, சாலை மறியலும், ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்துள்ளது.
இருந்த போதும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் அவர்கள் புகாரளித்தனர். இந்நிலையில், வட்டாட்சியர் முன்னிலையில் வைத்து நகைக்கடை உரிமையாளரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்த சம்பவத்தால், அங்த பகுதியில் ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)