“கடைசியா எல்லாத்தையும் செக் பண்ண போனேன்.. அப்போ!”.. ‘சப் கலெக்டர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில்’ ஊழியர் கண்ட அதிர்ச்சி காட்சி.. அலறி அடித்து ஓடிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான தீபன்ராஜ்.

பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்த இவருக்கு மாரியம்மாள் என்கிற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பட்டுக்கோட்டை கரிக்காடு தெருவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்திருந்தார் தீபன்ராஜ். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அலுவலக பணியாளர் முகுந்தன் என்பவர் அலுவலகத்தின் அறைகளை இறுதியாக பார்வையிட்டுவிட்டு மாடிக்குச் சென்றபோது அங்கு அலுவலகக் கூட்ட அரங்கில் உள்ள மின்விசிறியில் தீபன் ராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டு தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அலறி அடித்தபடி ஓடிச்சென்று அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததார்.
இதனையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று தீபன்ராஜின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுthப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
